

காப்பார்,பிப் 26-
மலேசிய இந்து சங்கம் காப்பார் வட்டாரப் பேரவை, தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனை (HTAR) மற்றும் எகோன்சேவ் ஹம்சா ஆலாங் காப்பார்(Econsave Hamzah Alang Kapar) இணை ஆதரவில், இரத்ததான முகாம் நேற்று சிறப்பாக நடைபெற்றது.
118 பதிந்து கொண்ட இந்நிகழ்வில் 82 பேர் இரத்ததானம் வழங்கினர். இரத்த தான முகாமில் சிறப்பு விருந்தினராக மாண்புமிகு திருமதி மரியம் அப்துல் ரஷீத்
மேரு சட்டமன்ற உறுப்பினர் மற்றும் ஏஎஸ்பி பாஸ்கரன், மாவட்ட சிறப்பு பிரிவு தலைவர் வடக்கு கிள்ளான் மாவட்ட காவல்துறை தலைமையகம் கலந்து கொண்டனர்
இந்நிகழ்வுக்கு பேராதரவு வழங்கிய காப்பார் இந்து சங்க உறுப்பினர்கள், HTAR மருத்துவர்கள், மருத்துவ உதவியாளர்கள், எகோன்சேவ் ஹம்சா ஆலாங் காப்பார்(Econsave Hamzah Alang Kapar) வர்த்தகம் மையம் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை இந்து சங்கம் காப்பார் வட்டாரப் பேரவைத் தலைவர் அருள்நேசன் தெரிவித்துக் கொண்டார்.

