கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதியில் சுகாதார மருத்துவ முகாம்!

ஷா ஆலம், பிப் 27
வரும் மார்ச் மாதம் முழுவதும் கோத்தா கெமுனிங் தொகுதியில் உள்ள பல பகுதிகளில் சுகாதார கர்னிவல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வை கோத்தா கெமுனிங் மாநில சட்டமன்றம் முதல் முறையாக ஏற்பாடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பொதுமக்களின் சுகாதாரப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த நிகழ்வு காலை 9 மணி முதல் பிற்பகல் 3 வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதில், கண், உடல் எடை, இரத்தத்தில் சர்க்கரை அளவு, இரத்த அழுத்தம் போன்றவை இலவசமாகப் பரிசோதனை செய்யப்படும்.

மேலும், மூக்கு கண்ணாடிகளுக்குத் தள்ளுபடி, இலவச மேமோகிராம் கூப்பன்களை வழங்குதல் போன்ற நடவடிக்கைகளும் இடம்பெறும்.

கோத்தா கெமுனிங் தொகுதி மக்கள் இந்த சுகாதார முகாமில் கலந்து கொண்டு நன்மை அடையும்படி சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles