674,000 மாற்றுத் திறனாளிகள் சமூகத் நலத் துறையில் பதிவு

புத்ராஜெயா, பிப் 27-
கடந்த 2022ஆம் ஆண்டு வரை சமூக நலத்துறையில் பதிவு செய்துள்ள மாற்றுத் திறனாளிகளின் எண்ணிக்கை 674,548 பேராகும்.
இந்த எண்ணிக்கை நாட்டின் மக்கள் தொகையில் இரண்டு விழுக்காட்டைப்
பிரதிபலிக்கிறது.

உலக சுகாதார நிறுவனம் வழங்கியுள்ள மதிப்பீட்டு அளவை விட இது குறைவானதாகும் என்று மலேசியா புள்ளிவிபரத் துறையின் தலைவர் டத்தோஸ்ரீ முகமது உஸீர் மாஹிடின் கூறினார்.

கடந்தாண்டு மார்ச் மாதம் வரை உலகம் முழுவதும் 130 கோடி பேர் குறிப்பிடத்தக்க உடல் குறைபாடுகளைக் கொண்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. இது உலக மக்கள் தொகையில் 16 விழுக்காடாகும்.

மொத்த மாற்றுத் திறனாளிகளில் 36.3 விழுக்காட்டினர் அல்லது 245,015 பேர் உடல் ரீதியான குறைபாடுகளைக் கொண்டுள்ள வேளையில் 35.1 விழுக்காட்டினர் கற்றல் குறைபாடுகளையும் 8.8 விழுக்காட்டினர் பார்வை
குறைபாட்டினையும் 0.5 விழுக்காட்டினர் பேச்சுத் திறன் குறைபாட்டையும் கொண்டுள்ளதாக அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles