
புத்ரா ஜெயா, பிப் 27-
நாட்டிற்குள் கொண்டு வரப்பட்டு 94 வங்காளதேச தொழாலாளர்களை கைவிட்ட நிறுவனத்திற்கு எதிராக மனிதவள அமைச்சு சட்ட நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் ஸ்டீவன் சிம் மற்றும் உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் தெரிவித்தார்.
கடந்த நவம்பர் மாதம் மலேசியாவுக்கு கொண்டு வரப்பட்ட வங்காளதேச தொழிலாளர்கள் வேலை இல்லாமல் தங்க இடமின்றி முதலாளியால் கைவிடப்பட்டனர்.
மீட்கப்பட்ட தொழிலாளர்கள் குடிநுழைவு துறை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் இடைக்கால பாதுகாப்பு ஆணையை பெறுவதற்கு மாஜிஸ்திரேட்டிடம் அழைத்து செல்லப்பட்டனர்.
சம்பந்தப்பட்ட முதலாளி ஆறு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்க நேரிடலாம்.

