
கோலாலம்பூர், பிப். 27-
இந்நாட்டில் தமிழ்ப் பள்ளிகள் சமூகத்தின் முக்கிய அடையாளமாகவும் தமிழை நிலைநாட்டும் களமாகவும் தொடர்ந்து திகழ்ந்து வருகின்றன.
இந்நாட்டில் தமிழைக் காப்பதிலும் தமிழ்ப்பள்ளிகளை நிலைநாட்டுவதிலும் அனைவரது பங்கும் அடங்கியுள்ளது.
தமிழ்ப் பள்ளிகளில் படித்தவர்கள் பரவலாக அதிக அளவில் வாழ்க்கையில் வெற்றி பெற்றிருக்கின்றனர்.
ஆகவே, மார்ச் 11ஆம் தேதி 2024 ஆம் ஆண்டுக்கான பள்ளி தவணைக் காலம் தொடங்கும் வேளையில் நம் தமிழர்கள் தங்களது பிள்ளைகளை தமிழ்ப்பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கும்படி ஜெயபக்தி குயில் நிறுவனத்தின் உரிமையாளர் டத்தோ டாக்டர் கு.செல்வராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்நாட்டில் தமிழ் வாழ வேண்டும் என்றால் தமிழ்ப்பள்ளிகள் நிலைத்திருக்க வேண்டும்.
இதற்கு தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க செய்தல் வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

