விபத்தில் காலை இழந்த சுப்பிரமணியத்திற்கு பகாவதி அம்மன் இல்லம் சக்கர நாற்காலியை வழங்கியது!

கோலாலம்பூர் பிப் 27-
விபத்தில் சிக்கி முட்டி பகுதிக்கு கீழ் தனது வலது காலை இழந்த சுப்பிரமணியம் (வயது 48) என்பவருக்கு கோலாலம்பூர் தாமான் டேசா பகாவதி அம்மன் இல்லத்தின் சார்பில் இன்று சக்கர நாற்காலியை வழங்கப்பட்டது.

சொக்சோ சமூக நல பாதுகாப்பு நிறுவனத்தின் மூலம் அவருக்கு உதவிகள் கிடைத்தாலும் இப்போது பகாவதி அம்மன் இல்லத்தின் மூலம் உதவிக்கரம் கிடைத்துள்ளது.

பகாவதி அம்மன் இல்லத்தின் பராமரிப்பாளர் திருமதி மகேஸ்வரி இன்று சுப்பிரமணியத்திடம் சக்கர நாற்காலியை நேரடியாக ஒப்படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறு வியாபாரத்தை தொடங்கி அதன் மூலம் தனது வயதான அம்மாவை பராமரிக்க இவர் முடிவு செய்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles