
நாட்டில் இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்காக மஇகாவுடன் இணைந்து வேலை செய்து வருவதாக மக்கள் சக்தி கட்சியின் தேசிய தலைவர் டத்தோஸ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன் தெரிவித்தார்.
இந்திய சமுதாயத்தை மேம்படுத்த மஇகாவின் தேசிய தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் பல்வேறு திட்டங்களை கொண்டுள்ளார். அவருடன் இணைந்து வேலை செய்வது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது.
விரைவில் இக்கூட்டணியின் ஏற்பாட்டில் மிக பெரிய நிகழ்ச்சி ஒன்று நடத்தப்படும் என தலைநகரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய தனேந்திரன் கூறினார்.
அதோடு, முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்கு முழு நீதி கிடக்க வேண்டும். இதுவே மலேசிய மக்கள் சக்தி கட்சியின் கோரிக்கையாகும்.
நாட்டின் புதிய மாமன்னராக சுல்தான் இப்ராஹிம் பொறுப்பேற்றுள்ளார்.
இவ்வேளையில் மலேசிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் என்ற முறையில் மாநிலம் முழுவதும் பயணம் மேற்கொண்டு மாநில பொறுப்பாளர்களையும் உறுப்பினர்களையும் சந்தித்தேன்.
இந்த சந்திப்பில் கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து முழுமையாக விவாதிக்கப்பட்டது.
இதனிடையே மாநில பயணத்தின் போது நஜீப்பிற்கு முழு மன்னிப்பு கிடைக்காததது குறித்து கட்சி உறுப்பினர்கள் வருத்தம் தெரிவித்தனர்.
நீதிமன்ற வழக்கு விசாரணையின் போது நஜீப்பிற்கு முழுமையான நீதி கிடைக்கவில்லை என மலேசிய மக்கள் சக்தி கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
ஆகவே சிறையில் இருக்கும் நஜீப்பிற்கு முழுமையான நீதி கிடைக்க வேண்டும்.
அதற்கான நடவடிக்கைகளை மடானி அரசு எடுக்க வேண்டும் என்று டத்தோஶ்ரீ தனேந்திரன் கேட்டு கொண்டார்.

