சேவை வழங்க ஏர் ஆசியா திட்டம்!

சென்னை, பிப் 28- இந்தியாவில் உள்ள இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களுக்குப் பயணச் சேவையை மேற்கொள்வதற்குத் தேவையான இருதரப்பு உரிமைகள பெறுவதற்கான சாத்தியங்களை ஏர் ஏசியா விமான நிறுவனம் தீவிரமாக ஆராய்ந்து வருகிறது என்று ஏர் ஏசியா நிறுவனத்தின் விமான நிலைய மற்றும் வாடிக்கையாளர் அனுபவப் பிரிவின் தலைவர் கேசவன் சிவானந்தம் கூறினார்.
தற்போது, மதுரை மற்றும் கோயம்புத்தூர் போன்ற நகரங்களுக்கு இருதரப்பு உரிமைகள் இல்லை. எனவே பயணிகள் சென்னை அல்லது திருச்சி வழியாகத்தான் மதுரை மற்றும் கோயம்புத்தூர் போன்ற நகரங்களைச் சுற்றிப் பார்க்க வேண்டியுள்ளது.
ஏர் ஏசியா கோலாலம்பூரில் இருந்து திருவனந்தபுரம், சென்னை, திருச்சிராப்பள்ளி, கொச்சி, ஹைதராபாத், பெங்களூரு, கொல்கத்தா, ஜெய்ப்பூர், புது டில்லி மற்றும் அமிர்தசரஸ் உள்ளிட்ட இந்தியாவின் 14 நகரங்களுக்கு நேரடிச் சேவையை மேற்கொள்கிறது என்று கேசவன் சிவானந்தம் கூறினார்.

