500 வெள்ளி அபராதத்தை செலுத்தி வெளிநாட்டவர்கள் தாயகம் திரும்ப அனுமதி!

கோலாலம்பூர் பிப் 28-
முறையான ஆவணங்கள் இல்லாத வெளிநாட்டினர் 500 வெள்ளி அபராதம் செலுத்தி தாயகம் திரும்பி
அனுப்பும் புதிய திட்டம் மார்ச் 1 ஆம் தேதி முதல் அறிமுகப்படுத்தப்படுகிறது என்று குடிநுழைவு துறை இயக்குநர் ஜெனரல் டத்தோ ருஸ்லின் தெரிவித்தார்.

பயண பாஸ்கள் அல்லது பெர்மிட்டை மீறி இருந்தால் தாயகம் திரும்ப 300 வெள்ளி அபராதம் விதிக்கப்படும். சட்டவிரோதமாக மலேசியாவில் தங்கி இருந்ததற்காக அவர்கள் குற்றம் சாட்டப்படாமலேயே சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கை டிசம்பர் 31 ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.

நாட்டில் இருந்து வெளியேற அவர்கள் தாய்நாடு விநியோகித்த கடப்பிதழ் அல்லது முறையான பயண ஆவணங்களை காட்ட வேண்டும். இந்த திட்டத்தில் இடம் பெறுவதற்கு கையெழுத்திட்ட 14 நாட்களில் ஒருவழி விமான டிக்கெட் மற்றும் போதுமான அபராதத் தொகை பணத்தை கொண்டிருக்க வேண்டும் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles