
பெட்டாலிங் ஜெயா, பிப் 29-
பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் YB Lee Chean Chung அவர்களுடன் சேர்ந்து மலேசிய சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் சங்கத்தின் (Persatuan Pengusaha Kecil Dan Sederhana Malaysia -SME Association)) 2024 சீனப் புத்தாண்டு விருந்தில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்று டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.
மலேசியாவில் உள்ள SME களுக்கு உற்பத்தியை அதிகரிப்பது, பரந்த வாடிக்கையாளர் தளத்தை அடைவது, பெரிய சந்தைக்கான அணுகலை வழங்குவது போன்றவற்றில் டிஜிட்டல் மயமாக்கல் முக்கிய பங்கு வகிக்கிறது.
இதனால் வணிக வளர்ச்சிக்கு பங்களிக்கிறது என்று அவர் சொன்னார்.மலேசியாவின் SME சங்கத்தின் தேசியத் தலைவரான Tuan Ding Hong Sing மற்றும் அழைப்பிற்காக சங்க உறுப்பினர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் அவர்.

