மாணவர்கள் வாக்களிக்க உயர்கல்வி கூடங்களுக்கு
ஐந்து நாள் விடுப்பு

பதினைந்தாவது பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்கு ஏதுவாக அனைத்து அரசாங்க உயர்க்கல்விக் கூட மாணவர்களுக்கு செப்டம்பர் 17 முதல் 21 வரை ஐந்து நாட்களுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளது.


உணர்வின் அடிப்படையிலும் 18 வயதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்தலில் வாக்களிப்பது உறுதி செய்யும் நோக்கிலும் இந்த விடுமுறை வழங்கப்படுவதாக உயர்கல்வித் துறை தலைமை இயக்குநர் டத்தோ பேராசிரியர் ஹூசாய்னி ஓமார் கூறினார்.


மாணவர்களுக்கு செப்டம்பர் 17 முதல் 21 வரை விடுமுறை வழங்கப்படுகிறது. அவர்கள் தங்கள் வசிப்பிட களுக்குச் சென்று வாக்களித்து விட்டு மீண்டும் உயர்கல்விக்கூடம் திரும்புவதற்கு போதுமான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles