அனைவரும் பயிரிடலாம் இயற்கை விவசாயம்!
உணவு பாதுகாப்பிற்கு சொந்த விவசாயமே மிக சிறந்தது!

எதிர்காலத்தில் உணவுக்கு மக்கள் போராட வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக வல்லுனர்கள் எச்சரித்து வருகின்றனர்.

அந்த அளவுக்கு உணவு தட்டுப்பாடு உலகெங்கிலும் நடைபெற்று வருகிறது.

இதனை சமாளிக்க வேண்டும் என்றால் பொதுமக்கள் சுயமாக வீட்டு அல்லது நகர்புற விவசாயிகளாக மாற வேண்டும் என ஆலோசனை கூறுகின்றது பினாங்கு பயனீட்டாளர் சங்கம்.

கடந்த 20 ஆண்டு காலமாக பொதுமக்கள் சுயமாக இயற்கை முறையிலான வீட்டுத் தோட்டம் அல்லது நகர் புறத் தோட்டத்தை துவக்கி பிரச்சாரம் செய்து வருகிறது பினாங்கு பயனீட்டாளர் சங்கம்.

சிரியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இயற்கை முறையிலான எளிய முறையில் விவசாயத்தை கற்றுத்தந்துள்ளது பினாங்கு பயனீட்டாளர் சங்கம்.

இதன் மூலம் ஆயிரக்கணக்கான மலேசியர்கள் நன்மை அடைந்துள்ளனர்.

மலேசியாவில் காய்கறிகளின் விலை சமீபகாலமாக 30% முதல் 40% வரை அதிகரித்து வருவதால், பலருக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

“அரசு விலையைக் குறைக்கும் என்று காத்திருப்பதற்குப் பதிலாக, நாம் எல்லோரும் தங்கள் காய்கறிகளை சொந்தமாகப் பயிரிடுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles