மக்களுக்கு கடும் சுமையை ஏற்படுத்தியுள்ள உணவு விலைகளை கட்டுப்படுத்தும்படி பிரதமரிடம் வலியுறுத்துவோம்! டத்தோ டாக்டர் லோகபாலா அறிவிப்பு

கோலாலம்பூர், மார்ச் 3-
நாட்டு மக்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ள உணவு வகைகளை கட்டுப்படுத்தும்படி பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை வலியுறுத்துவோம் என்று மைபிபிபி கட்சியின் தேசிய இடைக்கால தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா தெரிவித்தார்.

வரலாறு காணாத அளவுக்கு உணவு விலைகள் ஏற்றம் கண்டுள்ளன.
இது அனைத்து மக்களுக்கும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக விரைவில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரை சந்திக்க முடிவு செய்துள்ளோம். உணவு விலை ஏற்றறத்தால் மக்கள் படும் துயரத்தை அவரிடம் எடுத்துரைப்போம் என்றார் அவர்.

இந்த ஆண்டின் மைபிபிபி கட்சியின் 2ஆவது உச்சமன்ற கூட்டத்திற்கு இன்று தலைமையேற்ற பின்னர் நிருபர்களிடம் பேசுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

நாட்டில் நிலையான அரசாங்கம் தொடர ஒற்றுமை அரசாங்கத்திற்கு மைபிபிபி கட்சி தொடர்ந்து முழு ஆதரவை வழங்கும். அதேசமயம் மக்கள் படும் துயரத்தை தட்டிக் கேட்போம்.

பிரதமர் என்ற முறையில் உணவு விலைகளை கட்டுப்படுத்த டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் களம் இறங்கி அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

மேலும், உணவகங்களை நடத்தி கொண்டிருக்கும் உணவக உரிமையாளர்கள் அதிக வாடகை கட்டணத்தை செலுத்த வேண்டியுள்ளது.

வர்த்தக வாடகை கட்டுப்பாட்டு விதிகளுக்கு ஏற்ப வாடகை கட்டணத்தை அரசு கட்டுப்படுத்த வேண்டும்.
இப்போது 20,000 முதல் 40,000 வெள்ளிவரை உணவக முதலாளிகள் வாடகை கட்டுகிறார்கள்.இதுவும் உணவு விலை உயர்வுக்கு ஒரு காரணமாகும்.

வாடகை கட்டணம் குறைந்தால் கண்டிப்பாக உணவங்களில் உணவு விலைகளும் குறையும். இதனால் மக்களும் நிம்மதி அடைவார்கள் என்றார் அவர்.

இன்று நடைபெற்ற மைபிபிபி உச்சமன்ற கூட்டத்தில் தேசிய உதவித் தலைவர் டத்தோ மோகன் கந்தசாமி, டத்தோ இளையப்பன், ஓங் சி கெங், தகவல் பிரிவுத் தலைவர் ஸ்டீபன், மகளிர் அணி தலைவி புனிதா முனுசாமி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles