

கிள்ளான், மார்ச் 3 –
கிள்ளான் நாடாளுமன்ற தொகுதி மக்களுக்கு சிறப்பான முறையில் சேவையாற்றிக் கொண்டிருக்கும் கணபதிராவ் நேற்று பள்ளி மாணவர்களுக்கு பற்றுச் சீட்டுகளை வழங்கினார்.
பண்டமாரான் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்களுடன் இணைந்து விசுவம் இந்த நிகழ்வை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்தார்.
பண்டமாரான் சட்டமன்ற உறுப்பினர் டோனி லியோங், கவுன்சிலர் ஜாக்கி,ஸ்டோன், துவான் கோ கோக் மெங் மற்றும் மாணவர்களும் இதில் கலந்து சிறப்பித்தனர்.
வரும் மார்ச் 11 ஆம் தேதி 2024 ஆம் ஆண்டுக்கான பள்ளி தவணை தொடங்கும் வேளையில் கிள்ளான் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள வசதி குறைந்த மாணவர்கள் பள்ளி சீருடைகள், புத்தகப் பைகள் வாங்க உதவும் வகையில் இந்த பற்றுச் சீட்டுகள் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

