மனிதவள அமைச்சு 2 திருத்தங்களைச் சமர்ப்பிக்கிறது!

கோலாலம்பூர், 28
மனித வள அமைச்சு இந்த ஆண்டு நாடாளுமன்ற கூட்டத்தில் இரண்டு திருத்தங்களைச் சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதில் சமூக பாதுகாப்பு காப்பீடு செய்யப்பட்ட சம்பளத்தின் உச்ச வரம்பை தற்போதுள்ள RM5,000 லிருந்து RM6,000 ஆக உயர்த்துவது அடங்கும்.

2024இல் பணியாளர் சமூகப் பாதுகாப்புத் திருத்தம் மற்றும் 2024இல் வேலை வாய்ப்புக் காப்பீட்டு முறை திருத்தம் ஆகியவை மற்றொரு திருத்தமாகும் என்று மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் தெரிவித்தார்.

தற்போது 1.45 மில்லியனுக்கும் குறைவான பணியாளர்கள் 5,000 ரிங்கிட்களுக்கு மேல் சம்பளம் பெறுகிறார்கள்.அதே சமயம் 8.38 மில்லியன் ஊழியர்கள் ரிங்கிட் 5,000க்கும் குறைவான சம்பளம் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

“உயர்ந்த திருத்தம் (சம்பள உச்சவரம்பு) Socso இன் சமூக பாதுகாப்பை மேம்படுத்தவும் இந்த இரண்டு சட்டங்களின் பலன்களை மேம்படுத்தவும் உதவும் என்று” பெர்னாமாவிற்கு அளித்த போட்டியில் அவர் சொன்னார்.

மேற்கண்ட திருத்தங்கள், நலன், திறன் மற்றும் உற்பத்தித்திறன் போன்ற ஊழியர்களின் “3K” ஐ வலுப்படுத்துவதில் அமைச்சின் கவனத்திற்கு இணங்க இருப்பதாக அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles