தெலுக் பங்லீமா காராங் அருள்மிகு மகா மாரியம்மன் கோவில் நிர்வாகம் மாணவர்களுக்கு புத்தகப் பைகளை வழங்கியது!

பந்திங், மார்ச் 4-
கோலலங்காட் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள தெலுக் பங்லீமா காராங் அருள்மிகு மாரியம்மன் கோவில் நிர்வாகம் நேற்று மாணவர்களுக்கு புத்தகப் பைகளை வழங்கி பேருதவி புரிந்தது.

கோவில் தலைவர் செல்வநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ராயுடு கலந்து சிறப்பித்தார்.

வரும் மார்ச் மாதம் 11 ஆம் தேதி பள்ளி தொடங்கும் வேளையில் வசதி குறைந்த மாணவர்களுக்கு புத்தக பைகளை வழங்கிய கோவில் நிர்வாகத்தை பந்திங் சட்டமன்ற உறுப்பினருமான ராய்டு வெகுவாக பாராட்டினர்.

நேற்றைய நிகழ்வில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அதிக அளவில் கலந்து கொண்டது பாராட்டுக்குரியது. தங்கள் பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்க பெற்றோர்கள் தொடர்ந்து ஆதரவு வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles