

சிம்பாங் அம்பாட், மார்ச் 4-
பினாங்கு மாநில மனித நேய சமூக நல இயக்கத்தின் ஏற்பாட்டில் சிகரம் தொடு என்ற தலைப்பில் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நேற்று சிம்பாங் அம்பாட் ஸ்ரீ மீனாட்சி அம்மன் தேவஸ்தானம் மண்டபத்தில் விமர்சையாக நடைபெற்றது.
இயக்கத்தின் தலைவர் ஷாலினி சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் செனட்டர் லிங்கேஸ்வரன் சிறப்பு பிரமுகராக கலந்து கொண்டார். பினாங்கு மாநிலத்தில் தமிழ்ப் பள்ளியைச் சேர்ந்த 100 B40 இந்திய மாணவர்கள் மீண்டும் பள்ளி செல்ல ஒவ்வொரு மாணவர்களுக்கும் புத்தகப் பைகள், பண வவுச்சர் மற்றும் எழுதுபொருட்கள் வழங்கப்பட்டது.
இன்றைய உலகிற்கு கல்வியின் அவசியம் மற்றும் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் சிறு சொற்பொழிவை அவர் வழங்கினார்.
உலகத்தை மாற்ற நீங்கள் பயன்படுத்தக்கூடிய சக்தி வாய்ந்த ஆயுதம் கல்வி என்பதால் மாணவர்கள் சிறப்பான முறையில் கல்வியை கற்று தேர்ச்சி பெறும்படி அவர் வாழ்த்தினார்.

