மிட்லண்ட்ஸ் தங்கு விடுதியில் தங்குவதற்குமாணவர்கள் விண்ணப்பிக்கலாம்!

கிள்ளான் மார்ச் 4-
மிட்லண்ட்ஸ் தோட்டத் தமிழ் பள்ளியின் மாணவர் தங்கும் விடுதி அடுத்த கட்டமாக மேலும் மாணவர்களைத் தங்கி கல்வி கற்பதற்கு ஏற்பாடுகளை செய்து வருகின்றது.

இதன் தொடர்பாக வசதி குறைந்த மாணவர்கள் குறிப்பாகப் பள்ளிக்கு செல்வதற்கும் கல்வி கற்பதற்கும் சிரமங்களை எதிர்நோக்கும் குடும்ப பின்னணியில் உள்ள மாணவர்கள் விடுதியில் தங்குவதற்கு விண்ணப்பம் செய்யலாம்.

இந்த வசதி நான்காம் மற்றும் ஐந்தாம் வகுப்புகளில் பயிலவிருக்கும் ஆண் மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகின்றது.

இது தொடர்பாக மேலும் விவரங்களுக்கு மிட்லண்ட்ஸ் தோட்டத் தமிழ் பள்ளியைத் தொடர்பு கொள்ளலாம்.

இந்த தங்கும் விடுதியில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க விரும்பும் பெற்றோர்கள் 0178906852 என்ற எண்ணில் மூர்த்தியை தொடர்பு கொள்ளலாம்..

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles