நெகிரி மாநிலத்தில் உள்ள
59 தமிழ்ப் பள்ளிகளுக்கு
ஐந்து லட்சம் வெள்ளி மானியம்

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள 59 தமிழ்ப் பள்ளிகளுக்கு நெகிரி மாநில அரசு ஐந்து லட்சம் வெள்ளியை வழங்கி பேருதவி புரிந்துள்ளது.

2018 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் பக்கத்தான் ஹரப்பான் ஆட்சி ஏற்பட்டது முதல் இதுநாள் வரை மாநில அரசு தமிழ் பள்ளிகளுக்கு பேரு உதவி புரிந்து வருகிறது.

அந்த வகையில் இவ்வாண்டு தீபாவளியை முன்னிட்டு 59 தமிழ்ப் பள்ளிகளுக்கு ஐந்து லட்சம் வெள்ளி நேரடியாக வழங்கப்பட்டது என்று ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெ. அருள்குமார் தெரிவித்தார்.

நெகிரி செம்பிலான் மாநில அரசு சார்பில் நடைபெற்ற மாபெரும் தீபாவளி கலைவிழாவின் போது தமிழ் பள்ளிகளுக்கு இந்த மானியம் வழங்கப்பட்டது.

சிரம்பான் நாடாளுமன்ற உறுப்பினர் அந்தோணி லோக், சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் எம். குணசேகரன் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் இந்த விழாவில் கலந்து சிறப்பித்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles