Thanishre கண் அறுவை சிகிச்சைக்கு 5,000 வெள்ளி நிதியுதவி!

பாகான் டாலம், மார்ச் 7
சகோதரி Thanishre கண் அறுவை சிகிச்சைக்கான செலவை ஈடுகட்ட 5,000 வெள்ளியை பாகான் டாலம் சட்டமன்ற உறுப்பினர் கெல்வின் குமரன் மற்றும் செனட்டர் லிங்கேஸ்வரன் ஆகியோர் வழங்கி பேருதவி புரிந்துள்ளனர்.

“ரெட்டினோ பிளாஸ்டோமா “என்ற கண் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள இவருக்கு முன்னதாக, வலது கண்ணில் பரவியிருந்த புற்றுநோயை அகற்ற அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.வலது கண்ணுக்குப் பதிலாக போலிக் கண்கள் பொருத்தப்பட்டன.
இப்போது இவரது கண்ணில் கிருமிகள் பரவி இருப்பதால் அது மேலும் பரவாமல் தடுக்க மீண்டும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது.

சிலாங்கூர் பெட்டாலிங் ஜெயாவில் உள்ள துன் ஹுசைன் ஒன் கண் மருத்துவமனையில் இவருக்கு மிக விரைவில் அறுவைச் சிகிச்சை செய்யப்படவுள்ளது.

Thanishre தாயால் அறுவை சிகிச்சைக்கான மொத்தச் செலவை ஈடுகட்ட முடியவில்லை என்பதால் நானும் செனட்டர் லிங்கேஸ்வரனும் 5,000 வெள்ளியை வழங்கி உதவி புரிந்துள்ளோம் என்று கெல்வின் குமரன் தெரிவித்தார்.அறுவை சிகிச்சை செய்து அவர் விரைவில் குணமடைந்து இயல்பு வாழ்க்கை வாழ பிரார்த்திக்கிறேன் என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles