
ஷா ஆலம், மார்ச் 7:
வரும் 2029 ஆம் ஆண்டிற்குள் 200,000க்கும் அதிகமான சிலாங்கூர் கூ வீடுகளை உருவாக்க மாநில அரசு இலக்கு வைத்துள்ளது என்று வீடமைப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு, மொத்தம் 40,951 வீடுகள் கட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் 17,225 வீடுகள் இன்னும் கட்டுமானத்தில் உள்ளன. இதனால் அதிகமான மக்கள் வசதியான வீடுகளைப் பெற முடியும் என போர்ஹான் அமன் ஷா கூறினார்.
“தற்போது 17,225 வீடுகள் கட்டுமானத்தில் உள்ள நிலையில் எதிர்வரும் குறுகியக் காலத்தில் 12,000க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்படும். இந்த ஆண்டு இறுதிக்குள் 40,951 வீடுகளை எட்ட இலக்கு வைத்துள்ளோம்.
இத்திட்டத்தின் மூலம், மக்களுக்கு மலிவு விலையில் வீடுகளை வழங்குவது மாநிலத்தின் எண்ணமாகும் என தெரிவித்தார்.

