சன் பெங் தமிழ்ப் பள்ளியில் பயிலும் 79 மாணவர்களுக்கு பள்ளி சீருடைகள் – நோட்டு புத்தகங்கள் அன்பளிப்பு!

கோலாலம்பூர் மார்ச் 7-
நாட்டில் தலைசிறந்த தமிழ்ப் பள்ளிகளில் ஒன்றாக விளங்கி வரும் கோலாலம்பூர் சன்பெங் தமிழ்ப் பள்ளியில் பயிலும் 79 மாணவர்களுக்கு பள்ளி வாரியத் தலைவர் அண்ட்ரூ டேவிட் தலைமையில் நேற்று பள்ளி சீருடைகள் மற்றும் நோட்டு புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

வரும் மார்ச் 11 ஆம் தேதி பள்ளிகள் தொடங்கும் வேளையில் சன்பெங் தமிழ்ப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு உதவும் வகையில் இந்த அன்பளிப்புகள் வழங்கப்பட்டதாக அண்ட்ரூ டேவிட் தெரிவித்தார்.

மீண்டும் பள்ளிக்கு போகலாம் மற்றும் தமிழ்ப் பள்ளியே நமது தேர்வு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் பள்ளி மேலாளர் வாரியம் சன் பெங் தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கு உதவி வருகிறது.

பெற்றோர் ஆசிரியர் சங்கம் மற்றும் பள்ளி நிர்வாகம் எங்களுக்கு பெரும் துணையாக இருக்கிறது. பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி பாக்கியலெட்சுமி மற்றும் இதர ஆசிரியர்கள் மாணவர்கள் கல்வி நலனில் அதிக அக்கறை செலுத்தி வருகின்றனர்.

பள்ளி மேலாளர் வாரிய உறுப்பினர் டத்தோ ரஜினி, டத்தோ ரவி, பைசால் ஆகியோரும் எங்களுக்கு பக்க துணையாக இருந்து உதவி புரிகிறார்கள்.

இந்த தருணத்தில்நாட்டில் உள்ள இந்தியர்கள் தங்களது பிள்ளைகளை தமிழ்ப் பள்ளிகளுக்கு அனுப்பி உதவும்படி அண்ட்ரூ டேவிட் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles