

பிறை மார்ச் 7-
பத்து காவான் நாடாளுமன்ற தொகுதி சேவை மையத்தின் ஆதரவோடு பிறையில் நடைபெற்ற கைவினை பொருட்களை தயாரிக்கும் திறன் பயிற்சியில் இந்திய பெண்கள் கலந்து கொண்டனர்.
பிளாஸ்டிக்களில் இருந்து தயாரிக்கப்பட்ட மூன்று வெவ்வேறு வகையான கைவினைப் பொருட்கள் தொழில் திறன் பயிற்சியில்
பிறை சட்டமன்ற தொகுதியில் உள்ள
B40 குடும்பங்களைச் சேர்ந்த 15 பெண்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர் .
கைவினைப் பொருட்களை உருவாக்கும் திறன்களை இவர்கள் பெற்றது மிகவும் பாராட்டுக்குரியது என்று பத்துகாவான் தொகுதி ஒருங்கிணைப்பு அதிகாரி ஸ்ரீ சங்கர் தெரிவித்தார்.
அவர்கள் மிகக் குறைந்த செலவில் கைவினைப் பொருளை உருவாக்கும் திறன்களை வளர்த்துக் கொண்டனர். அவர்களின் கைவினைப் பொருட்கள் அனைத்தையும் அசல் கலைப்படைப்புடன் விற்பனை செய்யத் தொடங்கும். எல்லோரும் அவர்களுக்கு ஆதரவளிப்பார்கள் என்று நம்புகிறேன் என்றார் அவர்.

