

பத்தாங் காலி, மார்ச் 9-
உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்திய பிரகாஷ் நடராஜன் முயற்சியால் சிலாங்கூர் ஐ சீட் மூலம் பத்தாங் காலி உலு யாமை சேர்ந்த திருமதி சரோஜா சாமிதுரை (வயது 58) என்பவர்க்கு வியாபாரம் செய்ய பத்தாயிரம் வெள்ளி மதிப்பில் வியாபாரப் பொருட்கள் வழங்கப்பட்டன.
சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ராயுடு தலைமையில் ஐ சீட் வெற்றிவேல் வெற்றிகரமாக செயல்பட்டு இந்திய சிறு தொழில் வணிகர்களுக்கு பெரும் அளவில் உதவி புரிந்து வருகிறது.
அந்த வகையில் சரோஜா சாமிதுரை என்ற இந்திய மாது மீண்டும் தனது வியாபாரத்தை தொடங்க இந்த பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.
இவரின் மகன் விபத்தில் சிக்கியதால் அவரால் வியாபாரம் செய்ய முடியாமல் போனது. மகன் குணமடைந்ததும் மீண்டும் வியாபாரத்தை தொடங்கப் போவதாக சரோஜா சாமிதுரை தெரிவித்தார்.
சிலாங்கூர் ஐ சீட் பொறுப்பாளர் மாதவன், டாக்டர் சத்திய பிரகாஷ், உலு சிலாங்கூர் மாவட்ட கவுன்சிலர் ராஜசேகர் ராமையா மிஸ் ML வோங், புவனேஸ்வரன், ராஜேஷ் ராவ், கிராமத் தலைவர் ஓங் கோக் தியான் ஹுலு , உலு சிலாங்கூர் நாடாளுமன்ற ஒருங்கிணைப்பு அலுவலகப் பணியாளர்கள் ஆகியோர் நேற்று ஒன்றிணைந்து சரோஜா சாமிதுரை விடம் இந்த பொருட்களை ஒப்படைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

