

ரவாங், மார்ச் 9-
வரும் மார்ச் 11 ஆம் தேதி திங்கட்கிழமை நாடு தழுவிய அளவில் பள்ளிகள் திறக்கப்படும் வேளையில் வசதி குறைந்த மற்றும் ஆதரவற்ற இல்லத்தை சேர்ந்த 20 சிறுவர்களுக்கு உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்திய பிரகாஷ் நடராஜன் பள்ளி சீருடைகளை வாங்கி கொடுத்து பேருதவி புரிந்துள்ளார்.
புக்கிட் செந்தோசா MU Pasaraya பேராங்காடிக்கு சிறுவர்களை அழைத்து சென்ற டாக்டர் சத்திய பிரகாஷ் நடராஜன், துவான் சைபுடின் ஷாபி மற்றும் கவுன்சிலர் புவனேஸ்வரன், புவாட் அமாட் நராவி, Puan hayatichat, cik Wong மற்றும் உலு சிலாங்கூர் நாடாளுமன்ற ஒருங்கிணைப்பு அலுவலகப் பணியாளர்கள் ஆகியோர் ஒன்று சேர்ந்து சிறுவர்களுக்கு தேவையான பள்ளி சீருடைகளை தேர்வு செய்தனர்.
தங்களுக்கு பள்ளி சீருடைகள் கிடைத்த மகிழ்ச்சியில் அவர்கள் அனைவரும் பெரும் உற்சாகம் அடைந்தனர்.

