என் இதயத்திற்குள் நெருக்கமான கோவில்களில் ஒன்றாக பிறை தெலுக் இண்டா ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் விளங்குகிறது!

பிறை, மார்ச் 10-
பினாங்கு பிறை தெலுக் இண்டா, ஸ்ரீ மஹா மாரியம்மன் கோவிலில் நடைபெற்று வரும் சீரமைப்பு மற்றும் மேம்படுத்தும் பணிகளின் முன்னேற்றத்தை நேரில் ஆய்வு செய்வதற்காக நேற்று நேரடியாக கோவிலுக்கு சென்றதாக பினாங்கு மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ ராஜூ தெரிவித்தார்.

பிறை தெலுக் இண்டா ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமான கோயில்களில் ஒன்றாகும்.

கடந்த ஆண்டு பினாங்கு மாநில சட்டமன்றத் தேர்தலில் பிறை சட்டமன்ற வேட்பாளராகப் போட்டியிட நான் பிரச்சாரம் செய்யத் தொடங்கும் முன் இந்த கோவிலுக்கு முதலில் காலடி எடுத்து வைத்தேன்.

இப்போது இந்த கோவில் கட்டுமான பணி சுமார் 13 லட்சம் முதல் 14 லட்சம் வரை செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோவில் திருப்பணி பணிகள் இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே தொடங்கப்பட்டுள்ளன.

இந்த கோவில் பிறை இந்தியர்களின் சமூக மையமாக தொடர்ந்து செயல்படும் என்பதில் ஐயமில்லை.

இந்த கோவில் கட்டுமான பணிகள் திட்டமிட்டபடி நடைபெற வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles