
கோலாலம்பூர் மார்ச் 10-
நீண்ட விடுமுறைக்கு பின்னர் நாளை நாடு தழுவிய அளவில் 2024 ஆம் ஆண்டுக்கான பள்ளி தவணைக் காலம் தொடங்குகிறது.
இந்த அருமையான தருணத்தில் நம் தமிழர்கள் தங்களது பிள்ளைகளை தமிழ்ப்பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கும்படி ஜெயபக்தி குயில் நிறுவனத்தின் உரிமையாளர் டத்தோ டாக்டர் கு.செல்வராஜ் அன்போடு கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்நாட்டில் தமிழ் வாழ வேண்டும் என்றால் தமிழ்ப்பள்ளிகள் நிலைத்திருக்க வேண்டும். ஆகவே நாளை தமிழ்ப் பள்ளிகளில் முதலாம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் மாணவர்கள் எண்ணிக்கை 15,000 மேல் உயர வேண்டும்.
இந்த நல்ல செய்திக்காக இந்திய சமுதாயமே நாளை பெரும் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறது. தமிழ்ப் பள்ளியே நமது தேர்வு என்று தீவிர பிரச்சாரம் செய்த அனைவரையும் இந்த வேளையில் மனதார வாழ்த்துகிறேன் என்று அவர் சொன்னார்.

