உலக அழகிப் போட்டி… மகுடம் சூடினார் செக் குடியரசு பெண்

28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் நடைபெற்ற உலக அழகிப் போட்டியில் செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா மகுடம் சூடினார்.

உலக அழகி போட்டி என்றாலே மினுமினுக்கும் லைட், அழகிய பெண்கள், கவர்ச்சியான ஆடைகள் என கற்பனையில் தோன்றும். ஆனால், அழகு மட்டும் இல்லாமல், திறமை, அறிவு, சமூக சேவை மனப்பான்மை போன்ற பல திறன்களையும் கொண்டாடும் ஒரு மேடையே இது.

மும்பையில் உள்ள  ஜியோ உலக மாநாட்டு மையத்தில் நடைபெற்ற 71வது உலக அழகிப் போட்டியில் 115 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் பங்கேற்றனர்.

. இதில் செக் குடியரசைச் சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா 2024-ம் ஆண்டுக்கான 71வது உலக அழகி பட்டத்தை தட்டிச் சென்றார். லெபனான் நாட்டைச் சேர்ந்த யாஸ்மினா ஸைத்தோன் இரண்டாம் இடம் பெற்றார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles