
மலேசியாவில் இனங்களுக்கிடையில் ஒற்றுமையின் உணர்வைத் தொடர்ந்து ஒளிரச் செய்யட்டும் என்று மேன்மைத் தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷரபுடின் இட்ரிஸ் ஷா, தெங்கு பெர்மாய்சூரி நோராஸ்கின் தங்களது தீபாவளி வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளனர்
மலேசியா இந்து பெருமக்களுக்கு தீபாவளி நல்வாழ்த்துக்களை அனுப்புவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
தீப ஒளியின் திருவிழா ஒரு கலகலப்பான, இணக்கமான, மரியாதை மற்றும் ஒற்றுமையான சூழ்நிலையில் கொண்டாடப்படும் என்று நம்புகிறார்கள்.
“தீபாவளி பண்டிகையின் அடையாளமாக விளங்கும் ஒளியின் மிகுதியானது மலேசியாவில் இனங்களுக்கிடையில் ஒற்றுமையின் உணர்வைத் தொடர்ந்து ஒளிரச் செய்யட்டும் என்று சிலாங்கூர் அரச அலுவலகத்தின் முகநூலில் பகிரப்பட்ட அறிக்கையில் சிலாங்கூர் சுல்தான் தம்பதியர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

