‘உங்கள் கணவர் மோடியை ஆதரித்தால் இரவு உணவு பரிமாறாதீர்கள்”: பெண்களுக்கு கேஜ்ரிவால் வேண்டுகோள்

புதுடெல்லி“உங்களுடைய கணவன் மோடி என்று முழக்கமிட்டால் அவருக்கு நீங்கள் இரவு உணவு தரமாட்டேன் எனக் கூறுங்கள்” என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் பெண்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பல ஆண்கள் மோடியின் பெயரை உச்சரிக்கிறார்கள். அவர்களை நீங்கள் தான் சரி செய்ய வேண்டும். உங்களுடைய கணவன் மோடியின் பெயரை முழங்கினால், இரவு அவருக்கு உணவு பரிமாற மாட்டேன் எனக் கூறுங்கள். உங்கள் குடும்ப உறுப்பினர்களிடம் அவர்கள் எனக்கும் (கேஜ்ரிவால்) ஆம் ஆத்மி கட்சிக்கும் ஆதரவு அளிப்பார்கள் என உறுதி வாங்குங்கள்.

அதேபோல், பாஜகவுக்கு ஆதரவு அளிக்கும் மற்ற பெண்களிடம், அரவிந்த் கேஜ்ரிவால் தான் அவர்களின் சகோதரன் எனக்கூறுங்கள். நான் அவர்களுடைய மின்சார கட்டணத்தை இலவசமாக்கியுள்ளேன். பேருந்து கட்டணத்தை இலவசமாக்கியுள்ளேன்.  இப்போது  மாதம்தோறும் ரூ. 1,000 தர இருக்கிறேன். பாஜக அவர்களுக்கு என்ன செய்தது? எதற்காக பாஜவுக்கு வாக்களிக்க வேண்டும்? இந்த முறை கேஜ்ரிவாலுக்கு வாங்களிக்க அவர்களிடம்  சொல்லுங்கள். என  கேஜ்ரிவால் பெண்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles