

பிறை , மார்ச் 11-
இந்திய பெண்கள் சமையல் துறையில் சிறந்து விளங்கும் வகையில் அவர்களுக்கு பிறை சட்டமன்ற தொகுதி மூலம் சமையல் பயிற்சி திறன் வகுப்பு நடத்தப்பட்டது.
பிறை தொகுதியில் உள்ள B40 குடும்பங்களைச் சேர்ந்த 15 பெண்களுக்கு சமைப்பது மற்றும் பேக்கிங் செய்வது போன்ற திறன்கள் கற்றுக் கொடுக்கப்பட்டது. இன்றைய நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளதாகவும் சுவாரஸ்யமாகவும் இருந்தது என்று பத்து காவான் நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பு அதிகாரி ஸ்ரீ சங்கர் தெரிவித்தார்.

