
நாட்டின் 15 ஆவது பொதுத் தேர்தலில் போட்டியிட ஐபிஎப் கட்சி தயார் நிலையில் இருப்பதாக அதன் மகளிர் அணி தலைவி ராஜம்மாள் தெரிவித்தார்.
தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி ஐபிஎப் கட்சிக்கு தொகுதி வழங்குவார் என்று பெரிதும் எதிர்பார்க்கிறோம்.
இதனிடையே தீபாவளி பண்டிகையை கொண்டாடி மகிழும் மலேசியாவில் உள்ள அனைத்து இந்து பெருமக்களுக்கும் ஐபிஎப் கட்சி சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் சொன்னார்

