
Kedah Agro Holdings, வரவிருக்கும் ஹரி ராயா கொண்டாட்டத்திற்கு முன், 24 தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள சம்பளமாக ரிம 560,000 செலுத்தும் என்று மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் தெரிவித்தார்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற Kedah Agro Holdings வாரியக் கூட்டத்தில் மந்திரிபெசார் இன்கார்பரேட்டட் துணை நிறுவனத்தின் செயல்பாடுகளை நிறுத்த முடிவு செய்ததாகச் சிம் கூறினார்.
“ஆகையால், மார்ச் மாதம் முதல் மூன்று மாதங்களுக்கு, அறிவிப்புக்குப் பதிலாக அனைத்து சலுகைகளும், சம்பளங்களும் வழங்கப்படும்,” என்று ஸ்டீவன் சிம் தெரிவித்தார்.