
கோலாலம்பூர் மார்ச் 18-
மலேசிய இந்திய சமுதாயத்திற்கு உதவும் வகையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மடானி அரசாங்கம் மற்றொரு Blueprint மெகா திட்டத்தை உருவாக்குமா என்று ஜசெக செனட்டர் லிங்கேஸ்வரன் கேள்வியை முன் வைத்துள்ளார்.
மித்ராவுக்கு தொலைநோக்கு பெரும் திட்டம் ஒன்றை உருவாக்க பெமாண்டு அலோசனை நிறுவனம் அமைக்கப்பட்டிருப்பதாக ஒற்றுமை துறை அமைச்சர் கூறியுள்ளார்.
மித்ராவின் தலைவராக நியமிக்கப்பட்ட பத்து எம்பி பிரபாகரனின் பங்கேற்பு என்ன?
இப்போது ஒற்றுமை துறை அமைச்சின் கீழ் மித்ரா உள்ளது.
ஒற்றுமை துறை அமைச்சில் இந்திய சமுதாயத்தின் சார்பில் துணை அமைச்சர் இருக்கிறார்.
அப்படியானால் உண்மையிலேயே யார் மித்ராவுக்கு தலைமை ஏற்றுள்ளனர என்று அவர் கேள்வியை எழுப்பினார். மித்ரா நிதி விவகாரத்தில் முடிவு எடுப்பது யார். மித்ரா நடவடிக்கைகளை கண்காணிக்க பெமாண்டுவை நியமித்தது யார்? என்று அவர் கேள்வியை முன் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.