பினாங்கு மாநிலத்தில் பத்து லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம்!

பினாங்கு மார்ச் 22-
இன்று புவி நாள் 2024 தினத்துடன இணைந்து, பினாங்கில் பத்து லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை உயிர்ப்பூட்டுவோம் என்று திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

“பசுமைத் தன்மை மகிழ்ச்சியைத் தருகிறது” என்ற கருப்பொருளில், இந்த நிகழ்ச்சியை பினாங்கு மாநிலத் தலைவரின் தொண்டு அறக்கட்டளை, வீட்டுவசதி மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக் குழு அலுவலகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தை ஈடுகட்டவும், சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் உதவும் பினாங்கு மாநில அரசின் முயற்சிகளில் இந்தத் திட்டம் ஒன்றாகும் என்று பினாங்கு மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ ராஜூ தெரிவித்தார்.

இத்திட்டம் நமது மாநிலத்தின் விலைமதிப்பற்ற பொக்கிஷமான உயிரியல் பன்முகத்தன்மையைப் பாதுகாப்பதற்கும். அக்கறையுள்ள சமூகத்தின் கண்களைத் திறக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கூடுதலாக, ஒரு மில்லியன் மரங்களை நடுவது இயற்கை சூழலின் தரத்தை மேம்படுத்துகிறது.

அந்த வகையில் பிறை சட்டமன்ற தொகுதியில் குறைந்தது ஒன்றரை லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டமும் இதில் அடங்கும் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles