
பிறை மார்ச் 22-
பினாங்கு பெருநில த்தில் மூன்று இடங்களில் கட்டப்படும் 1,200 வீடுகளில் 900 வீடுகள் அங்கு நீண்ட காலமாக வசிக்கும் மக்களுக்கு வழங்கப்படும் என்று பினாங்கு மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ ராஜூ தெரிவித்தார்.
பிறை கம்போங் மானீஸ், பிறை முதன்மைச் சாலை மற்றும் பட்டவொர்த் ஊஜோங் கிராம் குடியிருப்புகள் மேம்பாட்டுக்கு வந்துள்ளன.
இங்கு நீண்ட காலமாக வாழ்ந்த மக்களை அதே இடத்தில் குடியமர்த்த முடிவு செய்துள்ளோம். பினாங்கு மாநில ஆட்சிக் குழு உறுப்பினராக பதவியேற்ற இந்த காலத்தில் 2,143 வசதி குறைந்த மக்களுக்கு வீடுகளை பெற்று தந்துள்ளேன் என்றார் அவர்.

