
கோல குபு பாரு சட்டமன்ற தொகுதியை தேசிய முன்னணி உரிமை கோராது என்று அதன் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜாஹிட் ஹமிடி கூறினார்.
நடப்பு சட்டமன்ற உறுப்பினர் லீ கீ ஹியோங் மரணமடைந்ததைத் தொடர்ந்து இந்த தொகுதி காலியாகி விட்டது.
ஒற்றுமை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் வகையில் இங்கு யாரை முன்னிறுத்தினாலும் கட்சி மதிக்கும் என்றார் அவர்.
இந்த தொகுதியில் மலாய் வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 50 சதவீதமாக அதிகரித்திருந்துள்ளது.
இருந்தாலும் மடானி அரசாங்கத்தை மதிக்கும் பொருட்டு, அம்னோ மற்றும் தேசிய முன்னணி உறுப்பு கட்சிகள் வெற்றிக்கு பாடுபடும்.
ஒற்றுமை அரசாங்கத்தின் தலைவர் யாரை நியமித்தாலும், அம்னோ தேர்தல் கேந்திரம் மட்டுமல்ல, தேசிய முன்னணி உறுப்பு கட்சிகளும் களத்தில் இறங்கி வேலை செய்யும் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்றார் அவர்.

