கெடா கடாரத்தில் இராஜேந்திரன் சோழன் சிலை திறக்கப்பட்டது!வரலாற்றை தெரிந்து கொள்ள எம்ஸ்ட் பல்கலைக்கழகத்தில் புதிய ஆய்வுத் துறை அமைக்கப்படும்…

கெடா கடாரத்தில் சுங்கை பட்டானி சிவலிங்கேஸ்வரர் ஆலயம், சக்தி அறவாரியம் ஏற்பாட்டில் இராஜேந்திரன் சோழன் திருவுருவச்சிலையை ம.இ.கா. தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் இன்று அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார்.

திருவுருவச்சிலை திறப்பு விழா ஒரு வரலாற்று நிகழ்வாக பதிவு செய்யப்பட்டுள்ளது. கடாரத்தை ஆண்ட ராஜேந்திரன் சோழன் நினைவாக இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

சோழ பேரரசர் இராஜேந்திரன் சோழனின் திருவுருவச் சிலையை கெடா மாநிலத்தில் வைக்க வேண்டும் என்று முழு மூச்சாக செயல்படுத்திய மக்கள் சக்தி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ ஆர்.எஸ். தனேந்திரனின் இச்செயல் பாராட்டத்தக்கது.

தமிழர்களின் வரலாறுகளையும் பண்பாடுகளையும் நமது இளைஞர்கள் தெரிந்து கொள்ள எய்ம்ஸ் பல்கலைக்கழகத்தில் சிறப்பு ஆய்வுத் துறை உருவாக்கப்படும்.

ராஜேந்திரன் சோழன் வரலாறு உட்பட நமது பண்டைய காலத்து வரலாற்றையும் தெரிந்து கொள்ளும் வகையில் இந்த சிறப்பு ஆய்வுத் துறை உருவாக்கப்படுகிறது என்று அவர் சொன்னார்.

உலகிலேயே கடல் கடந்து பல நாடுகளை கைப்பற்றி சரித்திரத்தை பதிவு செய்த மாமன்னர் ராஜேந்திரன் சோழன் நமக்கு ஓர் எடுத்துக்காட்டாக விழங்குகின்றார்.

இதை நமது இளைஞர்களும் எதிர்கால சந்ததியினரும் கண்டிப்பாக படித்து தெரிந்து கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles