
காஜாங்: மார்ச் 24-
நோன்பு பெருநாளை முன்னிட்டு ஏசான் குழுமம் 500 பேருக்கு பெருநாள் அன்பளிப்புகளை வழங்கியது.
இந்நிகழ்வு மஸ்ஜித் இந்தியா காஜாங்கில் சிறப்பான முறையில் நடைபெற்றது.
பெருநாள் காலத்தின் வசதிக் குறைந்த மக்களுக்கும் ஆதரவற்றவர்களுக்கு உதவிகளை ஏசான் குழுமம் வழங்கி வருகிறது.
இவ்வாண்டு பல பகுதிகளில் மொத்தமாக 5,000 அன்பளிப்புகளை ஏசான் குழுமம் வழங்கி வருகிறது.
அவ்வகையில் மஸ்ஜித் இந்தியா மற்றும் காஜாங்கில் 500 பேருக்கு இந்த உதவிகள் வழங்கப்பட்டது.
அதே வேளையில் நேற்று நோன்பு திறப்பு நிகழ்வில் 1,000த்திற்கும் மேற்ப்பட்டவர்கள் கலந்துக் கொண்டனர் என்று ஏசான் குழுமத்தின் நிறுவனர் டத்தோ ஹாஜி அப்துல் ஹமித் கூறினார்.

