
நீலாய் nlfcs சிப்பாங் வேலி ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
நீலாய் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ஜெ அருள் குமார் மற்றும் தேசிய நிலநிதி கூட்டுறவு கழகத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் டத்தோ பி.சகாதேவன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இந்த கோவில் கும்பாபிஷேகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அலையென திரண்டனர்.

