
புனித நோன்பு மாதத்தை முன்னிட்டு சிரம்பான் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள
23 மசூதிகள், 136 சூராக்களுக்கு 2 லட்சத்து 8,000 வெள்ளி மானியமாக வழங்கப்பட்டது.
மேலும் 33 கிராம அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு குழுக்களுக்கு (JPKK) ரமலான் நன்கொடையாக 66,000 வெள்ளி வழங்கப்பட்டது
போக்குவரத்து அமைச்சரும் சிரம்பான் நாடாளுமன்ற உறுப்பினருமான அந்தோனி லோக் இந்த மானியத்தை நேரடியாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராசா நாடாளுமன்ற உறுப்பினர் Cha Kee Chin, நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ஜெ அருள் குமார், சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன், ரெப்பா சட்டமன்ற உறுப்பினர் வீரப்பன் உட்பட பலரும் இதில் கலந்து சிறப்பித்தனர்

