கோலாகங்சார் நகராண்மைக் கழக உறுப்பினர்களாக. இரா. கோபி – வேதமாணிக்கம் மீண்டும் தேர்வு.

பேராக் மாநில கோலாகங்சார் மாவட்டத்தின் நகராண்மை கழக உறுப்பினர்களாக, ஜனநாயக செயலவை கட்சியின் (ஜ.செ.க) இந்தியர் பிரதிநிதிகளாக கோபி இராமசாமி மற்றும் வேதமாணிக்கம் கண்ணன் ஆகிய இருவரும் 2024-ஆம் ஆண்டு முதல் 2026-ஆம் வரைக்குமான கோலாகங்சார் உறுப்பினர்களாக மீண்டும் பதவி உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். கோலாகங்சார் நகராண்மைக் கழக அலுவலக கூட்ட அறையில் நடைபெற்ற இப்பதவி உறுதிமொழி ஏற்பு நிகழ்வில் பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும் ஜாலோங் சட்டமன்ற உறுப்பினருமான மான்புமிகு லோ சீ யி அவர்கள் கலந்து சிறப்பித்தார். இந்நகராண்மை கழகத்தின் தலைவரான முனைவர் சக்டுடின் அவர்கள் பதவி உறுதி மோழி சான்றிதழை பொருப்பேற்ற நகராண்மைக் கழக உறுப்பினர்களுக்கு வழங்கினார். இவ்வேளையில், கடந்த ஓராண்டாக இப்பொருப்பு வழங்கப்பட்டு தனது சேவையினை செவ்வன செய்து வந்த இரா. கோபி அவர்கள் தொடர்ந்து வாய்ப்பு வழங்கிய பேராக் மாநில ஜ.செ.க. தலைமை துவத்திற்கும், மான்புமிகு லோ சீ யீ அவர்களுக்கும், தனது முன்னோடியான ஜ.செ.க. சிரி தாமான் கிளைத் தலைவர் திரு. ஏலன் கண்ணன் அவர்களுக்கும், பேராக் மாநில அரசிற்கும் மற்றும் கோலாகங்சார் நகராண்மைக் கழக நிர்வாகத்திற்கும் தனது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.

ஏற்கனவே செயல்பாட்டில் மற்றும் நிலுவையில் இருக்கக்கூடிய மக்களுக்கான திட்டங்கள் மற்றும் செயல் பாடுகளை தொடர்ந்து செயல்படுத்தவதற்கு இவ்வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளப் போவதாக மேலும் அவர் கூறினார். ‘அனைவராலும் அனைத்தையும் செய்து விட முடியாது, ஆனால் எவராலும் ஏதாவது ஒன்றை செய்ய முடியும்’ எனும் கருத்தை முன்வைத்து எப்போதும் செயல்படும் மலேசிய திராவிடர் கழக சுங்கை சிப்புட் மற்றும் பேராக் மாநில செயலாளருமான கோபி இராமசாமி அவர்கள், மக்கள் நலன் காக்க, நாட்டின் வலம் பேன அனைவரது ஒத்துழைப்பை, தற்போது நாட்டின் பிரதமரான டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் ‘ மலேசிய மடானி’ எனும் கருப்பொருளில் செயல்படும் ஒற்றுமை அரசாங்கத்திற்கு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles