
மாற்றுத் திறனாளிகளும் மனிதர்கள் தான் என்பதால் எங்களின் திறமைகளைக் கண்டறிந்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவ முன் வரும்படி ரவாங் மாற்றுத் திறனாளிகளுக்கான தன்னிலை பயிற்சி மையத்தின் (ஐ.எல்.டி.சி.) தலைவர் ஜி.சிவா கேட்டுக் கொண்டார்.
ஐ.எல்.டி.சி. மையம் மாற்றுத் திறனாளிகளுக்காக மாற்றுத் திறனாளிகளால் அமைக்கப்பட்ட ஒரு மையமாகும்.
இது மலேசியாவில் கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேல் செயல்பட்டு வருகிறது.
ஐ.எல்.டி.சி. அமைக்கப்பட்டதன் முக்கிய நோக்கம் மாற்றுத் திறனாளிகள் அவர்களின் சொந்த காலில் நிற்பதற்கான அடிப்படைத் திறன்கள் மீது கவனம் செலுத்துவதே ஆகும்.இதன் மூலம் அவர்களுக்குத் தரமான வாழ்க்கையை உருவாக்கும் வழி வகை மேற்கொள்ளப்படுகிறது
காரணம் அவர்களும் மனிதர்கள்தான். சமூகத்திற்கு அவர்களாலும் பங்காற்ற முடியும் என்பதுதான் இங்கு முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்படுத்தப்படுகிறது.
கடந்த 1990களில் நான் விபத்துக்குள்ளான சமயத்தில் மாற்றுத் திறனாளிகளில் பலர் எங்கு போவது, சமூகத்திற்கு எவ்வாறு பங்களிப்பது குறித்து வழி தெரியாமல் தவித்துக் கொண்டிருப்பதை நான் கண்டேன். இதனைத் தொடர்ந்து முறையான ஓர் இயக்கம் அமைகப்பட வேண்டும் என்று கடந்த 2000ஆம் ஆண்டில் இதை உருவாக்கினோம் என்று அவர் சொன்னார்.

