சாலை விரிவாக்க பணிக்கு கின்ராரா தமிழ்ப்பள்ளி நிலத்தை எடுத்துக்கொள்ள சிலாங்கூர் மாநில அரசு அனுமதிக்கவில்லை!

பூச்சோங் மார்ச் 26-
நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் பூச்சோங் கின்ராரா தமிழ்ப் பள்ளிக்கு சொந்தமான நிலத்தை சாலை விரிவாக்க பணிக்கு எடுத்து கொள்ள சிலாங்கூர் மாநில அரசு அனுமதி வழங்கவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கின்ரார தமிழ்ப் பள்ளி நிலத்தை பாதிக்காமல் இரண்டு வழி சாலையை மூன்று வழி சாலையாக மேம்படுத்த கோலாலம்பூர் மாநகர் மன்றம் கடந்தாண்டு டிசம்பர் 7ஆம் தேதி மேம்பாட்டு நிறுவனத்திற்கு அனுமதி வழங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

1974 ஆம் ஆண்டு கோலாலம்பூர் மாநகர் மன்றம் உருவானது. ஆனால் கின்ராரா தமிழ்ப் பள்ளி 1946 ஆம் ஆண்டில் உருவானது.இந்த தமிழ் பள்ளியின் எல்லைப் பகுதி நிலம் கோலாலம்பூர் மாநகர மன்றத்தை உள்ளடக்கியது..

கின்ராரா தமிழ்ப் பள்ளி நிலத்தை மேம்பாட்டு நிறுவனம் எடுத்துக் கொள்வதற்கு சிலாங்கூர் மாநில அரசு ஒரு போதும் அனுமதி வழங்கவில்லை என்று கின்ராரா சட்டமன்ற உறுப்பினர் இங் ஸி ஹான் தெரிவித்தார்.

இந்தப் பள்ளியின் ஒரு பகுதி நிலத்தை ஏப்ரல் ஒன்றாம் தேதிக்கு தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என மேம்பாட்டு நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இந்தப் பள்ளி நிலத்தை கையடக்கப்படுத்தும் முடிவை எடுப்பதற்கு முன்னர் அங்கு பயிலும் 700 மாணவர்களின் எதிர்காலத்தை கோலாலம்பூர் மாநகர மன்றம் பரிசளிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles