
கோலாலம்பூர் மார்ச் 27-
இந்த நாட்டில் அனைத்து இனங்களும் ஒற்றுமையையுடன் வாழ்ந்து வரும் வேளையில் இந்து சமயத்தையும் சிவன் பெருமானையும் கேவலப்படுத்தும் வகையில் பேசிய ஸம்ரி வினோத் மீது அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜசெக செனட்டர் லிங்கேஸ்வரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
நேற்று மேலவையில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது, அண்மையில் வெளியான காணோலியில் ஸம்ரி வினோத் இந்து மதத்தையும் சிவலிங்கத்தையும் அவமதிக்கும் வகையில் பேசி உள்ளார்.
இது மிகவும் கண்டிக்கத்தக்கது. ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் இவர் மீது அரசாங்கம் உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்

