
கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் இந்தியர்களின் ஆதரவு யார் பக்கம் என்பதை சோதிக்கும் களமாக இருக்கும் என்று உரிமை கட்சியின் தலைவர் பேராசிரியர் டாக்டர் பி இராமசாமி தெரிவித்தார்.
இந்த இடைத்தேர்தல் எதிர்க்கட்சிக்கு இந்திய ஆதரவு க்கான எச்சரிக்கை சோதனையாக இருக்கும் என்றும் அவர் சொன்னார்.
எதிர்க் கட்சி வேட்பாளர் 18 விழுக்காடு இந்தியர்களின் ஆதரவை பெற்று விட்டால் இந்த தொகுதியில் அது வெற்றி பெறும்.
பக்கத்தான் ஹராப்பான் அரசாங்கம் இந்திய சமூகத்திற்கு துரோகம் இழைத்து விட்டதாக இந்தியர்கள் கருதினால் அவர்கள் எதிர்க்கட்சிக்கு வாக்களிக்கும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.
மேலும் இந்தியர்கள் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து செயல்படுவதால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது என்று அவர் சொன்னார்.

