
வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற விருக்கும் ஸ்ரீ கெம்பாங்கான் சட்டமன்றத் தொகுதி நிலையிலான இலவச சுகாதார பரிசோதனை இயக்கத்தில் பங்கேற்க பொதுமக்கள் அழைக்கப்படுகிறார்கள்.
ஸ்ரீ கெம்பாங்கான் பல்நோக்கு மண்டபத்தில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இந்த ‘சிலாங்கூர் சாரிங்’ இயக்கம் நடைபெறும் என்று பொது சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் தெரிவித்தார் .
இந்த இலவச சுகாதார இயக்கத்தில் தொற்றாத நோய்கள் (இதயம், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, சிறுநீரகம்) மற்றும் புற்றுநோய் (பெருங்குடல், புரோஸ்டேட், கர்ப்பப்பை வாய், மார்பகம்) ஆகிய சோதனைகள் நடைபெறும்.

