
கோலாலம்பூர், ஏப்ரல் 1-
நூறு ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த பிரிக்பீல்ட்ஸ் விவேகானந்தா ஆசிரமத்திற்கு எந்நவோரு ஆபத்தும் இல்லை என்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆசிரமம் மலேசிய இந்தியர்களின் அடையாளமாகவும் பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வரும் என்று மீரா கட்சி தலைவர் டத்தோ ஆர் சந்திரகுமணன் தெரிவித்தார்.
மேம்பாட்டு திட்டத்தால் இந்த ஆசிரமத்தை உடைக்கும் முயற்சிகள் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்டது. அப்போது மலேசிய இந்தியர்கள் பொங்கி எழுந்து இந்த இடத்தை பாதுகாக்க போராடினர்.
அப்போதைய சுற்றுலா அமைச்சர் டத்தோஸ்ரீ நஸ்ரி இந்த இடம் பாரம்பரிய சின்னமாக பதிவு செய்யப்படும் என அறிவித்தார்.
இதன் மூலம் 2016 ஆம் ஆண்டில் பிரிக்பீல்ட்ஸ் விவேகானந்தா ஆசிரமத்தை கோலாலம்பூர் மாநகர் மன்றம் தனது பதிவேட்டில் புராதன சின்னமாக ஏ – பிரிவில் பதவு செய்துள்ளது.இதனால் இந்த ஆசிரமம் தொடர்ந்து பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது என்று அவர் சொன்னார்.
2040ஆம் ஆண்டுக்கான டிபிகேஎல் மேம்பாட்டுத் திட்ட வரைப்படத்தில் இந்த ஆசிரமம் இடம் பெறவில்லை. அப்படி என்றால் இந்த ஆசிரமம் உடைக்கப்பட போகிறதா என்ற சந்தேகம் எங்களின் மனதில் ஏற்பட்டது.
இது தொடர்பில் டத்தோ சந்திரகுமணன் தலைமையில் பூச்சோங் முரளி, பினாங்கு மதியழகன், பேரின்பம் இயக்கத்தின் தலைவர் தாமோதிரன், பேரின்பம் செயலாளர் குபேரன் ஆகியோர் இன்று கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் திட்டமிடல் பிரிவு இயக்குநர் Datuk சூல்கர்ணயனை சந்தித்து பேச்சுவார்த்தையை நடத்தினர்.
இந்த சந்திப்பில் பிரிக்பீல்ட்ஸ் விவேகானந்தா ஆசிரமம் நாட்டின் புராதன சின்னமாக அங்கீகரிக்கப்பட்டிருப்பதை உறுதி செய்தார்.
அங்கு எந்தவொரு மேம்பாட்டு திட்டமும் இல்லை. பிரிக்பீல்ட்ஸ் விவேகானந்தா ஆசிரமத்தில் எந்தவொரு திட்டமும் குறிப்பாக ஒரு ஆணியை அடிக்க வேண்டும் என்றால் கூட அனுமதி பெற வேண்டும் என்று விளக்கம் கொடுக்கப்பட்டதாக டத்தோ சந்திரகுமணன் தெரிவித்தார்.
அந்த வகையில் பிரிக்பீல்ட்ஸ் விவேகானந்தா ஆசிரமத்திற்கு எந்நவோரு ஆபத்தும் இல்லை என்று அவர் சொன்னார்.

