மோசடிகளை தவிர்ப்பீர்!பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் உத்தரவு

புத்ரா ஜெயா, ஏப்ரல் 3-.
அனைத்து அமலாக்க நிறுவனங்களும் மோசடி மற்றும் கசிவு நிகழ்வதை தவிர்த்துக் கொள்ளும்படி பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஜே.கே.டி.எம் மற்றும் மலேசிய சுங்கத்துறையில் முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதை தொடர்ந்து அரசாங்கம் அனைத்து அமலக்க நிறுவனங்களையும் உன்னிப்பாக கவனித்து வருகிறது.

இது பொது சேவை துறை மீது எதிர் மாறான கண்ணோட்டத்தை உண்டாக்கும். மேலும் நாட்டின் நற்பெயருக்கு களங்கத்தை விளைவிக்கும்.

நாங்கள் மிகவும் உன்னிப்பாக கவனிக்கிறோம் என்பதால் மோசடி புகார்கள் தவிர்க்கப்படும் என்று பெரிதும் எதிர்பார்க்கிறேன் என நேற்று நிதி அமைச்சு பணியாளர்களின் மதாந்திர கூட்டத்தில் உரையாற்றும் போது இதனை தெரிவித்தார்.

-பெர்னாமா

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles