
செ.வே. முத்தமிழ் மன்னன்
கோலாலம்பூர் ஏப்ரல் 3-
எட்டு முறை உலக ஸ்குவாஷ் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தவர் டத்தோ நிக்கோல் டேவிட் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரால் உருவாக்கப்பட்டவர் இளம் ஸ்குவாஷ் வீராங்கனை சிவசங்கரி ஆவார்
லண்டன் ஸ்குவாஷ் கிளாசிக் போட்டியில் மூன்று உலக சாம்பியன்களை வீழ்த்தி பட்டம் வென்று சாதனை படைத்திருக்கிறார் சிவசங்கரி.
உலக அளவில் மிகப்பெரிய போட்டியில் சிவசங்கரி வெற்றி பெற்றிருப்பது தமக்கு பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது .
வருங்காலத்தில் இவர் மேலும் பல புதிய சாதனைகளை படைக்கும் ஆற்றலை கொண்டிருக்கிறார் என்று டத்தோ நிக்கோல் டேவிட் தமது கருத்தை பதிவிட்டுள்ளார்.

